மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் தலைமையில் நடைபெற்ற ராமநவமி பேரணியில் வன்முறை!

0 1315

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை தொடர்ந்து ஹூக்லி நகரில் பதற்றம் நிலவி வருகிறது.

ஹூக்லியில் பாஜக தேசிய துணைத் தலைவர் திலிப் கோஷின் தலைமையில் நடைபெற்ற ராமநவமி பேரணியில் மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அண்மையில் ஹவுரா பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், திலிப் கோஷ் தலைமையிலான பேரணியிலும் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால், மீண்டும் வன்முறை வெடித்தது. பதற்றத்தை தணித்து அமைதியை நிலைநாட்ட, சம்பவ இடத்திற்கு துணை ராணுவப் படையினர் விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments