சட்டப்பேரவைக்கு கருப்பு உடையுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்த நிலையில், எதேச்சையாக தானும் கருப்பு உடையுடன் வந்த வானதி சீனிவாசன்...!

0 1862
சட்டப்பேரவைக்கு கருப்பு உடையுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்த நிலையில், எதேச்சையாக தானும் கருப்பு உடையுடன் வந்த வானதி சீனிவாசன்...!

ராகுல்காந்தியின் தகுதிநீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு உடையுடன் வந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் கருப்பு புடவையுடன் வந்தது பேசுபொருளானது.

சட்டப்பேரவைக்குள் நுழையும்போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி உள்ளிட்டோர் வானதியின் கருப்பு உடை குறித்து கேள்வி எழுப்ப, சிரித்துக் கொண்டே அவர்களை கடந்து சென்றார்.

சட்டப்பேரவை விவாத நேரத்தில் "காங்கிரஸ்காரர்கள்தான் யூனிஃபார்பில் வந்திருக்கிறார்கள். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்திருப்பதுபோல் தெரிகிறது" என சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், எமெர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டுத் தலைவர்கள் எந்த அளவு சிரமங்களை அனுபவித்தார்கள் என்பதை நினைவூட்டவே தாம் கருப்பு உடையுடன் வந்ததாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments