வாரணாசியில் ரூ.1,780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று அவர் உரை நிகழ்த்துகிறார். காச நோயை ஒழித்துக் கட்டிய மாநில அரசுகளுக்கு பாராட்டும் விருதுகளையும் மோடி அப்போது வழங்க உள்ளார்.
பகல் 12 மணியளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டியும் புதிய திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியின் உள்கட்டமைப்புக்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
Comments