இறால் உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது - எல்.முருகன்

2014ஆம் ஆண்டிற்கு முன் மீன்வளத்துறையில் 8 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த முதலீடு, தற்போது 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாகவும், இறால் உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளை இறாலின் மரபணு மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன் நோய்களுக்கான கண்காணிப்பு திட்டத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோதம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், தூத்துக்குடி, விசாகபட்டினம் உள்ளிட்ட 5 துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும், இந்தியாவிலயே முதல் முறையாக தமிழ்நாட்டில் கடல் பாசி பூங்கா அமைத்து கடல் பாசி வளர்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மீன் வளத்துறையில் இதுவரை 3 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எல்.முருகன் கூறினார்.
Comments