ஷிவமொகாவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

0 1397

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் 450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையமாகும்.

இன்று முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 80-வது பிறந்தாளையொட்டி நிகழ்ச்சி மேடையில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக ஷிவமொகா விமான நிலையத்தின் மாதிரியை பிரதமர் மோடி பார்வையிட்டார். கர்நாடகாவில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments