பாறைகளில் மோதி கடலில் மூழ்கிய அகதிகள் படகு.. குழந்தைகள், பெண்கள் உள்பட 59 பேர் கடலில் மூழ்கி பலி!

அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கி வந்த கப்பல், பாறைகளில் மோதி மூழ்கியதில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை உள்பட 59 பேர் உயிரிழந்தனர்.
120 க்கும் மேற்பட்ட அகதிகளுடன் Calabria பகுதி நோக்கி சென்ற கப்பல், கரையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலிருந்த பாறைகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
கடல் சீற்றத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த அந்த கப்பல், நீரில் வேகமாக மூழ்கத் தொடங்கியதும் சிலர் வேகமாக நீச்சலடித்து கரை சேர்ந்தனர். இந்த விபத்தில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை மற்றும் பெண்கள் உள்பட 59 பேர் உயிரிழந்தனர்.
Comments