அமெரிக்காவில் 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்த நபர் கைது..!

அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணாத்தில் TATE County எனுமிடத்தில் சரமாரியாக துப்பாக்கியால் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கைது செய்தனர்.
ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பல்பொருள் கடைக்குள் புகுந்த ஒருவர் சுட்டதில் அங்கு ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று ஒரு தம்பதியரும் அந்த நபரால் சுடப்பட்டனர்.
இதில் மனைவி உயிரிழந்தார். கணவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் சந்தேகத்திற்குரிய நபரின் வாகனத்தைப்பின் தொடர்ந்து விரட்டிய போது மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
Comments