சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட போலியான BIS ஸ்டாண்டர்ட் மார்க் கொண்ட எல்இடி பறிமுதல்..!

இந்திய தர நிர்ணய முத்திரையை போலியாக அச்சிட்டு சீனாவிலிருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மின்சாதனப் பொருட்களை இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள கண்டெய்னர் யார்டில் சோதனை நடத்திய இந்திய தர நிர்ணய அதிகாரிகள் 672 எல்இடி விளக்குகளில் போலியாக இந்திய தர நிர்ணய சான்று முத்திரை குத்தியிருந்ததை கண்டுபிடித்தனர்.
10 ஆயிரம் பிளக்குகள் மற்றும் கேபிள்களில் ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாததையும் கண்டறிந்து அவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments