அதானி குழும 4 நிறுவனங்களின் தரமதிப்பீட்டை குறைத்தது மூடிஸ் நிறுவனம்..!

ஹிண்டன்பெர்க் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் கடன்தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களின் தரமதிப்பீட்டை குறைத்தது.
ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையால் அதானி குழுமம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் ($100 பில்லியன்) நஷ்டத்தை சந்தித்த நிலையில், Adani Green Energy Ltd, Adani Green Energy Restricted Group, Adani Transmission Step-One Ltd, Adani Electricity Mumbai Ltd ஆகிய நிறுவனங்களை நிலைத்தன்மை கொண்ட பட்டியலிலிருந்து எதிர்மறையான நிறுவனங்கள் பட்டியலுக்கு மூடிஸ் மாற்றியது.
அதே நேரத்தில், மற்ற 4 நிறுவனங்கள் நிலைத்தன்மையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ள மூடிஸ், நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்கான நிதி மற்றும் மறுநிதியளிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதை பொறுத்து தங்களின் மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தை மறு ஆய்வு செய்துக்கொள்வோம் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
Comments