திரைப்படப் பாடலுக்கு அதிக சவுண்டு வைக்காததால் ஆத்திரம்…. மதுபோதையில் செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது

மதுரையில் மதுபோதையில் அடுப்பில் பெட்ரோல் குண்டை பற்றவைத்து செல்போன் கடை மீது வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.
செல்லூரைச் சேர்ந்த முகம்மது சலீம் என்பவர் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் பாடிக் கொண்டிருந்த சினிமா பாடல் ஒன்றினை சத்தமாக வைக்கச் சொல்லி மதுபோதையில் இருந்த முகம்மது சலீம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு கடை ஊழியர் மறுக்கவே ஆத்திரமடைந்த சலீம் தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை அருகில் இருந்த உணவகத்தில் அடுப்பில் பற்ற வைத்து செல்போன் கடை மீது தூக்கி எறிந்துள்ளார். இதில் கடை ஊழியர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
Comments