6 மாதம் மோசமான சாலை அரைமணி நேரத்தில் சரிசெய்ய நடவடிக்கை..! அரசியல் பிரமுகர்கள் எங்கே.?
சென்னை மணலி எக்ஸ்பிரஸ் வே சுங்கச்சாலை 6 மாதமாக மோசமாக காட்சி அளித்த நிலையில், செய்தியாளர் கேள்வி எழுப்பியதால் அரை மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் தொடங்கி எண்ணூர் வரையிலான மணலி எக்ஸ்பிரஸ் சுங்கச்சாலை கடந்த 6 மாதங்களாக மிகவும் மோசமாக சிதிலம் அடைந்து கிடந்த நிலையில் இது தொடர்பாக சுங்கசாலை புகார் பதிவேட்டில் பலர் புகார் தெரிவித்தனர்.
மோசமான சாலைக்கு பயந்து பல மாநகர பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டதால் இடையன்சாவடி, ஆண்டார்குப்பம், ஈச்சங்குழி, மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்தனர்.
இந்த நிலையில் பலர் புகார் அளித்தும் ஏன் சாலை சீரமைக்கப்படவில்லை ? என்று சுங்கச்சாவடி அலுவலகத்தில், செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
ரோடு சரியில்லைன்னா எழுதி வச்சிட்டு போ.. என்று மிரட்டுவது போல அங்கிருந்த ஊழியர் கோபால் என்பவர் பேசினார்
சுங்கசாவடி உதவி மேலாளர் உமாசங்கர் என்பவரோ, வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பது மட்டுமே தங்கள் வேலை என்றும் சாலை போடுவது தேசிய நெடுஞ்சாலைத்துறையின் வேலை என்றும் கூறினார்
பின்னர் இந்த பகுதியில் புதிய சாலைகள் அமைக்க 58 கோடி ரூபாய்க்கு ஒப்பந்த எடுத்துள்ள நிறுவன அலுவலரிடம் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் படும் சிரமம் குறித்தும், நெடுஞ்சாலையை பராமரிக்க தவறிய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு புகார் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அரை மணி நேரத்தில், எம்.எப்.எல் சந்திப்பு சாலை பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு குழுவினர் வந்தனர். குண்டும் குழியுமான சாலைகளை தோண்டி சமன்படுத்தி புதிய சாலை அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர்.
இதேவேகத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் சிதிலமடைந்து கிடக்கும் சாலைகளை, தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஒட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments