துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,300-ஐக் கடந்தது

துருக்கி, சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உறவினர்களை இழந்து ஒரேநாளில் தங்கள் வாழ்க்கையே சின்னாபின்னமாகிப் போனதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியாமல் திகைத்து நின்கின்றனர்.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க 4 ஆயிரம் பேரைப் பலிகொண்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
வீடுகளை இழந்து, குடும்ப உறவினர்களைப் பறிகொடுத்து நிற்கும் ஒவ்வொருவர் முகத்திலும் அதிர்ச்சியும், பீதியும் மேலோங்கி உள்ளது
நிலநடுக்கத்தின் போது ஆசை ஆசையாய் கட்டியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகள் தங்கள் கண்முன்னே அடுத்தடுத்து சரிந்து விழுந்ததைக் கண்டு கதிகலங்கிப் போயினர்.
சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு நடுவே சிக்கிய உறவுகளையும், உயிர்களையும் காப்பாற்ற அவர்கள் பிரயத்தனம் எடுத்தது காண்போரை கலங்க வைத்தது. உயரமான இடிபாடுகளில் சிக்கியவர்கள் கிரேன் மூலம் மீட்கப்பட்டனர்.
ஆண்களும், பெண்களும் பதற்றத்துடன் உறவினர்களைத் தேடிய நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அடுத்தடுத்து உயிருடன் மீட்கப்பட்டது பெரும் சோகத்திலும் சிறிய ஆறுதலாக அமைந்தது.
Comments