இப்படி குடியிருந்து குடிச்சா எந்த பெண்ணாவது உன்ன லவ் பண்ணுமா..? 7 கார்களை உடைத்த லவ்வர்பாய்..!

0 1850
இப்படி குடியிருந்து குடிச்சா எந்த பெண்ணாவது உன்ன லவ் பண்ணுமா..? 7 கார்களை உடைத்த லவ்வர்பாய்..!

சென்னை வடபழனியில், காதலி கழற்றி விட்டுச்சென்ற ஆத்திரத்தில் மூக்கு முட்ட மதுஅருந்தி விட்டு,7 கார்களின் கண்ணாடியை உடைத்த குடிகார லவ்வர்பாயை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சென்னை வடபழனி தயாளு நகர் மெயின் ரோடு மற்றும் பாரதீஸ்வரர் நகர் 2வது தெருவில் சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த 7க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம ஆசாமி ஒருவன், கல்லால் அடித்து நொறுக்கியபடி சென்றான்.

கார்களை அடித்து உடைக்கும் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியே வந்து அந்த மர்ம நபரை மடக்கிப் பிடிக்க துரத்தி சென்றுள்ளனர். சுவர் ஏறிக் குதித்து தப்பியோட முயன்ற அவனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மது போதையில் இருந்த அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவன் தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியரின் மகனான சாகித்யன் என்பதும் புத்தக கண்காட்சியில் வேலைப்பார்த்ததும் தெரியவந்தது. சாகித்யன் பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடும் மன உளைச்சலில் சுற்றியுள்ளார்.

சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள மதுபான கடையில் மூக்கு முட்ட மது அருந்தியதால் காதலியின் நினைவு வந்ததால், ஆத்திரத்தில் மதுக்கடையில் வம்பு செய்து முதுகு வீங்க அடிவாங்கி உள்ளார். அடி கொடுத்த நபர்கள் சாகித்யனின் செல்போனை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.

காதலும் போயி.. காதல் தோல்விக்கு ஒரே ஆறுதலாக இருந்த செல்போனும் பறிபோனதால் ஆத்திரமடைந்த சாகித்யன், மதுபோதையில் தெருக்களில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகளை கண்மூடித்தனமாக கல்லால் அடித்து உடைத்துச் சென்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

சாகித்யனின் தாக்குதலில் வீட்டு வாசல் முன்பு பறவைகள் கூட எச்சம் போய்விடக்கூடாது என்று முழுவதுமாக மூடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்களின் கண்ணாடிகளும் உடைபட்டது. அதில் ஒரு காரில் பாஜக கொடி கட்டப்பட்டிருந்தது.

இப்படி குடிச்சா எந்த பொண்ணுப்பா லவ் பண்ணும்.? என்று எச்சரித்த போலீசார் சாகித்யனை கைது செய்து பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர். பறவை திட்டத்தின்கீழ் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். காதலில் தோற்று மதுவில் விழுந்தால் , மிச்சம் மீதி இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரும் பஞ்சராகி, டேஞ்சரான மன நிலையில் கம்பி எண்ண வைத்து விடும் என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments