ரஞ்சிதத்தை கொஞ்ச சென்ற வாரிசுக்கு வச்சுட்டாங்க சூடு..! சாட்டிங் காதலியால் டுவிஸ்ட்..

0 3156

கள்ளக்குறிச்சியில் திருமணமான பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்ட மாணவரை மடக்கிப்பிடித்த உறவினர்கள், கட்டிப்போட்டு சூடு வைத்து அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

காதலியின் வீட்டுக்குள் எகிறி குதித்தவருக்கு, எட்டு இடங்களில் சுற்றி சுற்றி சூடு வைக்கப்பட்ட சம்பவம்..

கள்ளக்குறிச்சி அருகே உள்ள காரனுர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரின் கல்லூரிச் செல்லும் வாரிசுக்குத்தான் இந்த சூடுவைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது

21 வயது மாணவரான பூவரசன் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவர் தனது ஊரில் உள்ள திருமணமான பெண் ஒருவருடன் பழக்கமாகி வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்து வந்துள்ளார்.

அந்தப் பெண்ணை பூவரசன் காதலில் வீழ்த்தியதாக எண்ணி, பெண்ணின் உறவினர்கள் அவரை அழைத்து கண்டித்துள்ளனர்.

ஆனாலும் அந்தப்பெண் உடனான பழக்கத்தை அவர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணின் கணவர் வெளியூர் சென்றுவிட்டதாக தகவல் வந்ததையடுத்து குஷியான பூவரசன், சம்பவத்தன்று அந்தப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இவர் அந்த வீட்டுக்குள் செல்வதை பார்த்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று பூவசரனை மடக்கிப்பிடித்துள்ளனர்.

தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்ததாக பூவரசன் சமாளித்துள்ளார்.

அதனை காதில் வாங்காத பெண்ணின் உறவினர்களோ தர்ம அடி கொடுத்து பூவரசனின் ஆடைகளை கழற்றி கைகால்களை கட்டி போட்டுள்ளனர்.

பூவரசனை ஆடையின்றி படுக்க வைத்து , தண்ணீர் தானே வேண்டும் இதோ செம்பில் வருகின்றது... என்று கூறி ஒரு செம்பை அடுப்பில் வைத்து நன்றாக சூடாக்கி எடுத்து வந்து, அவரது இடுப்புக்கு கீழே முன் பக்கமும் பின் பக்கமும் எட்டு இடங்களில் சுற்றி சுற்றி சூடு வைத்துள்ளனர்.

பூவரசனின் வாய் துணியால் கட்டப்பட்டிருந்ததால் அவரால் கத்தி கூச்சலிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதோடு , அவரை அழைத்து வந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவரின் தாய், கச்சிராயபாளையம் காவல் நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார்.

இளைஞர் பூவரசனிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

இந்த சூடு வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த மாணவருடன் திருமணம் கடந்த காதல் சாட்டிங்கில் ஈடுபட்ட பெண் தப்பிவிட்ட நிலையில், அந்தப் பெண்ணை ரகசியமாக சந்திக்க சென்ற மாணவரோ புரண்டு படுக்க இயலாத நிலையில் சூடு பட்ட பூனையாக மருத்துவமனையில் தவித்து வருகின்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments