குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

0 1175

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன், தேசிய குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வாஷிங்டனில் உள்ள அம்மருத்துவமனைக்கு இருவரும் முகக்கவசம் அணிந்து சென்றிருந்தனர்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோரிடம் பேசிய ஜோ பைடன், வலிமையாக இருங்கள்... அனைத்து சரியாகிவிடும்” என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.

தொடர்ந்து, ஜில் பைடன் குழந்தைகளுக்கு, "The Snowy Day" என்ற புத்தகத்தை வாசித்துக் காண்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments