இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் சென்று அர்ஜென்டைனா வீரர் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்தனர்..!

0 2476

லட்சத்தீவின் தலைநகரம் கவரத்தியில் இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் அர்ஜென்டைனா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாளை நடைபெறும் இறுதி போட்டியில் அர்ஜென்டைனா- பிரான்சு அணிகள் களம்காண்டிகின்றன. இந்த நிலையில இதுவே தமக்கு கடைசி உலக கோப்பை போட்டி என அர்ஜென்டைனா வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸி, இதுவரை 11 கோல்களை அடித்து அர்ஜென்டைனாவுக்காக உலக கோப்பை  போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கின்றார்.... 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments