சவ ஊர்வத்தில் வந்த போதை ஆசாமிகள் அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கும் காட்சிகள்..!

0 1658

திருச்சி அருகே இறுதிசடங்கு ஊர்வலத்தில் கலந்து கொண்ட போதைக்கும்பல் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சமயபுரம் நம்பர் ஒன் கேட் அருகே சவ ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த சிலர் சாலையில் வந்த பேருந்துகளுக்கு வழிவிடாமலும், மலர் மாலைகளை பேருந்துகளின் மீது வீசியும் ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சியிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்தை வழிமறித்த போதைக்கும்பல் பேருந்தை தாக்கி வைபர் கம்பியை உடைத்து ஓட்டுநர் கருணாநிதி மீது தாக்குதல் நடத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயமடைந்த ஓட்டுநர் கருணாநிதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தகராறு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments