ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்துக்கும் நடுவே சிக்கிக்கொண்ட மாணவி-பத்திரமாக மீட்ட ரயில்வே போலீசார்
ஆந்திராவில், ரயிலில் இருந்து இறங்குகையில், கால் இடறி பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையேயான பகுதியில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட மாணவியை, ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.
குண்டூர்- ராயகடா பயணிகள் ரயிலில் சென்ற மாணவி, விசாகப்பட்டினத்தின் துவ்வாடா ரயில் நிலையத்தில் இறங்க முயன்றார். அப்போது கால் இடறி, பிளாட்பாரம் மற்றும் ரயிலுக்கு இடையேயான பகுதியில் விழுந்தார். இதனை கவனித்த ரயில்வே போலீசார் மற்றும் சக பயணிகள் சத்தமிட்டு, உடனடியாக ரயிலை நிறுத்தியதையடுத்து, மாணவி மீட்கப்பட்டார்.
இடுப்பில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments