லைகர் திரைப்படம் ரூ.100 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை

0 1551

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான லைகர் திரைப்படம் 100 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறையினர் அவரிடம் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணை நிறைவடைந்தவுடன் கருத்து தெரிவித்த விஜய் தேவரகொண்டா, பிரபலமானவராக இருந்தால் சில பிரச்னைகளையும், விளைவுகளையும் சந்திப்பது, வாழ்க்கையில் ஒரு அனுபவம் என தெரிவித்தார்.

அமலாக்கத்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக தெரிவித்த விஜய் தேவரகொண்டா, தான் தனது கடமையை செய்திருப்பதாகவும், அவர்கள் மீண்டும் தன்னை விசாரணைக்கு அழைக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments