பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் மகன் போக்சோ வழக்கில் கைது

திருநின்றவூர் தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி தாளாளரின் மகன் வினோத் ஜெயராமன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வீடு திரும்பினர்.
இந்நிலையில் தலைமறைவான வினோத்தை, கோவாவில் கைது செய்த தனிப்படையினர், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.
Comments