உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வீட்டிற்கு புறப்பட்ட ஊழியர்கள் போராட்டம்..!

சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, ஐபோன் தொழிற்சாலையை விட்டு வெளியேறிய ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ஜெங்சோ நகரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் தொழிற்சாலை, உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையாக கருதப்படுகிறது.
2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் அத்தொழிற்சாலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஊழியர்கள் அங்கேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால்,கொரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், உடமைகளுடன் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்த முடியாமல் திண்டாடிய போலீசாரை தாக்கிவிட்டு, தடுப்புகளைத்தாண்டி சென்றனர்.
Comments