நவ.15 ஆம் தேதி வெளியாகவிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்... உலகமே உற்று நோக்குவது ஏன்?

15 ஆம் தேதி வெளியாக உள்ள அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளை உலகம் உற்று நோக்கி கவனித்து வருகிறது.
வல்லரசு நாடான அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளன. வரும் 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் தலைமையில் போட்டியிட்டுள்ளனர்.
அதனால், தற்போதைய தேர்தலில் டிரம்பின் கட்சி அதிக இடங்களை கைப்பற்றினால் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் 80 வயதைக் கடந்த டிரம்பே மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
Comments