இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு..!

நெல்லை மாவட்டம் மன்னார்புரத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கண்ணங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான முருகன்,நாகமலை ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மன்னார்புரம் அருகே பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையை கடந்துள்ளனர்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர்களின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகமலலை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஒட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments