இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இந்தி திணிப்புக்கு எதிராக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் கொண்டுவந்தபின் பேசிய முதலமைச்சர், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும், அலுவல் மொழியாக அறிவிக்க, மத்திய அரசு தயாராக உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
தமிழ் மொழி, இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து வகை தகுதித் தேர்வுகளிலும் கட்டாய ஆங்கில நடைமுறையை தவிர்க்கக்கூடாது என்றும் முதலமைச்சர் கூறினார்.
Comments