தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடரில் ஓபிஎஸ், ஆதரவு எம்எல்ஏ பங்கேற்பு

0 3043

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில், 19ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத் தொடர் முதல் நாளான இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், பவுன்சர்கள் புடை சூழ வந்து கலந்து கொண்டார்.

ஓபிஎஸ்சுடன் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வந்தனர். சட்டப்பேரவை துணைத் தலைவர் என்ற முறையில் தனது கையெழுத்தை ஓபிஎஸ் பதிவு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments