"சினிமாவில் பள்ளிப் பருவ காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும்" - நடிகர் தாமு வேண்டுகோள்

0 4585
"சினிமாவில் பள்ளிப் பருவ காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும்" - நடிகர் தாமு வேண்டுகோள்

சினிமாவில் பள்ளிப் பருவ காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என நடிகர் தாமு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக உணவு தினத்தினை முன்னிட்டு மதுரையில் அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் சார்பில் பார்வையற்றோருக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் இரவு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய தாமு, மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால் பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தையாக தமது உள்ளம் குமுறுகிறது என்றார்.

நீதிபோதனைகளை பள்ளி வகுப்பிலயே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர வேண்டும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments