அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தே தீருவேன் - இபிஎஸ் உறுதி

அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தே தீருவேன் - இபிஎஸ் உறுதி
அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியே தீருவேன் என்று, அக்கட்சியின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் அதிமுகவில் அடிமட்ட தொண்டரும், ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்பதற்கு, தாமே சிறந்த உதாரணம் என குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகாலம் தாம் வழங்கிய நல்லாட்சியை, மக்கள் இன்றும் எண்ணிப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
தங்களுடைய எண்ணம் ஈடேறவில்லை, தங்களுக்கும் வாரிசுகளுக்கும் பதவி கிடைக்கவில்லை என்று இடமாறிய தலைவர்கள்தான் உண்டே தவிர, கட்சி மீது ஈடுபாடு கொண்ட தொண்டர் யாரும் இடம் மாறவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Comments