ரூ.2 கோடி கடன் பிரச்னையால் கணவன்- மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

0 4866

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், 2 கோடி ரூபாய் கடன் தொல்லையால் கணவன்- மனைவி இருவரும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்கிட்டுத்தற்கொலை செய்துக்கொண்டனர்.

மில்லத் நகரை சேர்ந்த சிவக்குமாரும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் சூளகிரியில் மளிகைக்கடை நடத்தி வந்தனர். அவர்களுக்கு, 2 கோடி ரூபாய் வரை கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடை சாவியை வாங்க, இன்று காலை வீட்டிற்கு வந்த கடை ஊழியர், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்ததில் கணவன்- மனைவி இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தம்பதியின் உடல்களை கைப்பற்றி, உடல் கூராய்வுக்காக, போலீசார் அனுப்பி வைத்தனர். இரண்டு மகள்களையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கணவன்-மனைவி இருவரும் கடிதம் எழுதிவைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments