மதம் மாற்றப்பட்ட பட்டியலின மக்களுக்கு எஸ்.சி .அந்தஸ்து ஆராய 3 பேர் கொண்ட கமிஷன் நியமனம்...

0 2675

மற்ற மதங்களுக்கு மாற்றப்பட்ட பட்டியலின மக்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
மதம் மாறிய பட்டியலின கிறிஸ்தவர்களும், பட்டியலின முஸ்லிம்களும் தங்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்குள் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கால நிர்ணயமும் செய்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments