மாணவிகளின் குளியல் வீடியோ சக மாணவியால் ஆன்லைனில் கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு.. போராட்டத்தில் குதித்த மாணவ, மாணவிகள்!
சண்டீகர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளின் குளியல் வீடியோ ஆன்லைனில் சக மாணவியால் கசியவிடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வீடியோவை கசிய விட்டதாக கூறப்படும் மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள ஏராளமான மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவலை மறுத்துள்ள போலீசார், ஒரேயொரு மாணவி மட்டுமே மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட மாணவி வீடியோ ஒன்று மட்டுமே ஆன்லைனில் இருக்கிறது என்றும், அவர் வேறு எந்த வீடியோவையும் ரிக்கார்டிங் செய்யவில்லை,மின்னணு சாதனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து, தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
Comments