பயணிகளுடன் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி

0 1693
பயணிகளுடன் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். சூரன்கோட் பூஞ்ச் பகுதியில் இருந்து ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, டேரி ரலியோட் என்ற இடத்தில் சாலையில் சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பூஞ்ச் மாவட்டத்தில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் விபத்து நடந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments