அரசு பேருந்து - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 4 பேர் படுகாயங்களுடன் மீட்பு.!

நாகப்பட்டினம் மாவட்டம் மேலப்பிடாகை அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர் திசையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பேருந்து அரசு பேருந்து மீது நேராக மோதியது. இதில், பேருந்து ஓட்டுநர் இருவர் உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments