சினிமா பட பாணியில் காதலியின் திருமணத்தை நிறுத்திய காதலன்.. தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெண்ணின் சகோதரர்!

சென்னை தண்டையார்பேட்டையில் சினிமா பட பாணியில் காதலியின் திருமணத்தை காதலன் தடுத்து நிறுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
நெடுஞ்செழியன் நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும், மணிகண்டன் என்பவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் நேதாஜி நகரில் உள்ள முருகன் கோவிலில் இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, தாலி கட்டும் நேரத்தில் திடீரென கோவிலுக்கு வந்த சதீஷ் என்பவர், ரேவதியை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர், சதீஷை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்ததில், ரேவதியும்-சதீஷும் வண்ணாரப்பேட்டையில் உள்ள நகை கடையில் ஒன்றாக வேலை செய்து வந்ததும், ஒரு வருடமாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், திருமணம் நடக்கவுள்ளதால் தன்னை அழைத்து செல்லுமாறு சதீஷுக்கு ரேவதி மெசேஜ் அனுப்பியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments