உள்ளூர் ரவுடிகளுக்கு எதிராக மாணவிகள் சாலையில் போர்க்குரல்..! ஓட்டுனரை தாக்கியதால் ஆவேசம்.!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையில் வழிவிட மறுத்த கல்லூரி மினி பேருந்து ஓட்டுனரை அடித்து மிரட்டி தங்க சங்கிலியை பறித்த உள்ளூர் ரவுடியை கண்டித்து கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகளை ஏற்றிச்சென்ற மினி பேருந்தை படுக்கப்பத்து கிராமத்தில் வழிமறித்த உள்ளூர் ரவுடிகள் இருவர், ஓட்டுனர் கிளிண்டன் என்பவரை பேருந்தில் இருந்து கீழே பிடித்து இறக்கி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
சாலையில் தங்களுக்கு வழிவிடாமல் ஒதுக்கிச் சென்ற ஆத்திரத்தில் அந்த ஓட்டுனரை விரட்டி விரட்டி தாக்கிய இருவரும், அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியையும் பறித்துக் கொண்டனர்.
ஓட்டுனர் கிளிண்டன் தன்னை தாக்கியவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் பேருந்தில் இருந்த மாணவிகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்
தங்கள் பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்த நிலையில் பேருந்து எடுத்துச்செல்லும்படி சமாதானத்தில் ஈடுபட்ட உள்ளூர் பஞ்சாயத்தார் மாணவிகளிடம் வாக்குவாதம் செய்தனர்
காவல்துறையினர் வந்து சமாதனப்படுத்தி மாணவிகளை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்த நிலையில், ஓட்டுனர் கிளிண்டனிடன் பறிக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டுக் கொடுத்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் ரவுடி உள்ளிட்ட இருவரை தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.
Comments