ரயில்வே துறைக்கு ஆன்லைன் ஏல ஒப்பந்தம் மூலம் ரூ.844 கோடி வருவாய்..!

0 2971

ஆன்லைன் ஏல ஒப்பந்தம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 844 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சிறிய தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், ரயில்வே வளாகங்களில் விளம்பரம் செய்தல், வாகன நிறுத்துமிடம், பார்சல் இடம் குத்தகை மற்றும் கட்டண கழிவறைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் ஏலம் விடும் ஒப்பந்தப் பணிகளை கடந்த ஜூன் மாதம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.

கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த இந்த ஏலத்தில் 68 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட 8,500 சொத்துகள் தொடர்பான 1,200 ஒப்பந்தங்கள் ஏலம் மூலம் 844 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments