மதுபோதையில் துதிக்கையை தொட்ட நபரை தள்ளிவிட்ட யானை.!

மத்தியபிரதேசத்தில், மதுபோதையில் துதிக்கையை தொட்ட நபரை யானை பலமாக தள்ளியதில், அவர் மயக்கமடைந்தார். டாமோஹ் பகுதியில் வீதியில் உலா வந்த யானையிடம், சிலர் ஆசி பெற்ற நிலையில், மதுபோதையில் வந்த நபர் யானையின் துதிக்கையை தொட்டுள்ளார்.
அப்போது, யானை பலமாக தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். தாக்குதலில் மயக்கமடைந்த நபரை பொதுமக்கள் மீட்டனர்.
Comments