மெட்ரோ ரயில் பணியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மெட்ரோ ரயில் தொழிலாளர்கள்..!

0 2723
மெட்ரோ ரயில் பணியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மெட்ரோ ரயில் தொழிலாளர்கள்..!

சென்னை, ரெட்டேரி பகுதியில் மெட்ரோ பணியின் போது கிரேன் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கொளத்தூர் அருகே ரெட்டேரி இரட்டைப் பாலத்தில் மெட்ரோ ரயில் பணியில் நேற்றிரவு ஏராளமான ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்  அப்போது, தூண்கள் அமைப்பதற்காக ராட்சத குழாயை கிரேன் மூலம் தூக்கிய போது பாரம் தாங்காமலும், மழையின் காரணமாக மண் அதிகளவில் ஈரப்பதத்துடன் காணப்பட்டதாலும் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த கிரேன் அருகே இருந்த மேம்பாலத்தின் மீது மோதியதில் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்தது. இதனை அடுத்து கிரேனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments