நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் தானும் தூக்கிட்டு தற்கொலை.!

மயிலாடுதுறை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இரண்டாவது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ பெரம்பூரைச் சேர்ந்த அறிவழகன், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஜெரினா பீவி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
ஜெரினா பீவியை தனியே விட்டுவிட்டு வெளிநாடு சென்றிருந்த அறிவழகன் சில மாதங்களுக்கு முன் வீடு திரும்பிய நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த அறிவழகன் ஜெரினா பீவியை வாய், கழுத்து பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி கண்முன்னே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
Comments