'இலவசங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பதுதான் தவறு'.. குடிமகனுக்கு அரசு செய்யும் கடமைகள் தவறு அல்ல-அண்ணாமலை

இலவசங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது தவறு என்றும், குடிமகனுக்கு அரசு செய்யும் கடமைகள் தவறு அல்ல என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், Public goods எனப்படும் சுகாதாரம், கல்வி ஆகியவை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் இது மக்களின் அடிப்படை உரிமை என்றும் கூறினார்.
மேலும், வீடு, எரிவாயு, குடிநீர் போன்றவற்றை இலவசம் என்ற பெயரில் குறிப்பிடாமல் மத்திய அரசு வழங்குவதாகவும், இதை மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாக பா.ஜ.க. கருதுவதாகவும் அண்ணாமலை கூறினார். இலவச அறிவிப்பால் சுகாதாரம், பள்ளிக்கல்விக்கு போதிய நிதி ஒதுக்க முடிவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments