தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜூலு இன மக்களின் புதிய மன்னராக மிசுசுலு கா ஸ்வெலிதினி பதவியேற்பு.!

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜூலு இன மக்களின் புதிய மன்னராக மிசுசுலு கா ஸ்வெலிதினி முடிசூட்டப்பட்டார்.
தனது தந்தையின் மரணத்தை தொடர்ந்து 47 வயதான மிசுசுலு புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஜூலு இன ஆண்களும் பெண்களும் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டனர்.
மன்னர்களுக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்றாலும், தென்னாப்பிரிக்கா மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட ஜூலு மக்கள் மீது இவர்கள் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளனர்.
Comments