தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் - அண்ணாமலை
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நிதியமைச்சர் கார் மீதான காலணி வீச்சு சம்பவம் விரும்பத்தகாத ஒன்று என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தேசிய கொடியுடன் கடல் வழியே கோதண்ட ராமர் கோவில் வரை சென்று திரும்பிய அவர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டின் முன் கொடியேற்றினார்.
பின்னர் பேட்டியளித்த அவர், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கச்சத்தீவு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தவுடன், அதனை மீட்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார்.
Comments