மனைவியை கீழே தள்ளிவிட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்த கணவன் கைது.!

0 4247

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கீழேதள்ளிவிட்டு, அடிப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் கட்டிப்பிடித்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட குடிகார கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் கார் ஓட்டுனரான பழனி தன் மனைவி பாரதி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதுடன், அவரை வேகமாக கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த அடிபட்ட பாரதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் கட்டிப்பிடித்து கொண்டு குடிபோதையில் பழனி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அருகில் இருந்தவர்கள் பாரதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும், சிகிச்சை பலனின்றி பாரதி இன்று உயிரிழந்தார். சந்தேக புத்தியில் மனைவியை கொலை செய்த பழனியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments