ஆற்றில் தவறி விழுந்த இளைஞரை கடித்து குதறிய முதலை

குஜராத்தில் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் முதலை கடித்து குதறியதில் உயிரிழந்தார்.
வதோதரா மாவட்டத்தில் பத்ரா எனும் இடத்தில் பாயும் தாதர் ஆற்றைக் கடக்க முயன்ற 30 வயதுடைய இளைஞரின் உடலை திடீரென்று முதலை பிடித்து இழுத்த நிலையில், அதனை பார்த்த அப்பகுதி மக்கள் முதலையிடம் இருந்து அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால், உடலைவிட மறுத்து முதலை ஆற்றில் மூழ்கிய நிலையில், காணாமல் போன இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் உள்ளூர் மக்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
Comments