சிஎஸ்ஐஆர் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த கலைச்செல்வி நியமனம்

0 3968

மத்திய அரசின் அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

38 ஆராய்ச்சி நிலையங்களுடன் செயல்படும் சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவராவார்.

காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக 2019ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கலைச்செல்வி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்.

பள்ளியில் தமிழ்வழியில் பயின்றது கல்லூரியில் அறிவியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள உதவியதாகத் தெரிவித்துள்ளார். 125 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், ஆறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையும் பெற்றுள்ள இவர் லித்தியம் அயன் பேட்டரி பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments