அருவியில் குளித்த காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன் கைது

0 3763
அருவியில் குளித்த காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன் கைது

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் உள்ள கைலாசா கோனா அருவிக்கு அழைத்துச்செல்லப்பட்டு கணவரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர்.

செங்குன்றம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று தமிழ்ச்செல்வி மாயமான நிலையில், அவரது தந்தை போலீசில் புகாரளித்தார்.

இது குறித்த விசாரணையில், கைலாசா கோனா அருவியில் குளிக்கும் போது கத்தியால் தமிழ்ச்செல்வியை குத்தி, கீழே தள்ளிவிட்டதாக போலீசாரிடம் மதன் கூறினார். மதனை மீண்டும் கைலாச கோனாவில் வைத்து விசாரித்த போலீசார், தமிழ்ச்செல்வியின் சடலத்தை கண்டறிந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments