தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளைய தினம் திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
வருகின்ற 31ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரையில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments