விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்.. பதில் துப்பாக்கிசூடு நடத்தி கட்டுப்படுத்திய காவல்துறை!

அமெரிக்காவின் டலாஸ் விமான நிலையத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், பதில் துப்பாக்கி சூடு நடத்திய காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை, விமான நிலையத்துக்குள் வந்த 37 வயது பெண் திடீரென அங்கிருந்த காவலரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். எனினும் அந்த அதிகாரி துணிச்சலுடன், அப்பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கட்டுப்படுத்தினார்.
இச்சம்பவத்தின் போது விமான நிலையத்தில் பதிவான காட்சிகளையும் காவலரின் உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
Comments