கிருஷ்ணகிரியில் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு நாம் தமிழர் கட்சி பிரமுகரை கடத்திய கும்பலை கைது செய்த போலீசார்.!

0 1269

கிருஷ்ணகிரியில் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு நாம் தமிழர் கட்சி பிரமுகரை கடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

முனியன்கொட்டாயை சேர்ந்த  சிவசம்பு என்பவர் நாம் தமிழர் கட்சியில் மாவட்ட வணிகர் பிரிவு பாசறை செயலாளராக இருந்து வந்தார்.கடந்த 21ந்தேதி இரவு 9 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வீடு திரும்பிய அவரை, காரில் வந்த  மர்ம கும்பல் மடக்கி கத்தி முனையில் கடத்திச் சென்றது.

மேலும் அவரது மனைவியிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டும் போனில் அந்த கும்பல் மிரட்டியது. இது குறித்து மனைவி அளித்த புகாரின் பேரில், சிவசம்புவின் செல்போன் லோகேசன் மூலம் அவர் இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்தனர்.

இதனை அறிந்த அந்த கும்பல் சிவசம்புவின் கண்ணை கட்டி சாலையோரமாக இறக்கி விட்டு தப்பிச் சென்று விட்டது. பின்னர் அங்கு சென்ற போலீசார் சிவசம்புவை பத்திரமாக மீட்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் 6 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2பேரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments