சென்னையில் அதிபயங்கர பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது.!
சென்னை கோயம்பேடு பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு மேம்பாலத்தில் இளைஞன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றும், வீலிங் செய்வதாகவும் கிடைத்த தகவலின் பேரில், இருசக்கர வாகனத்தின் பதிவெண் மற்றும் சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இது தொடர்பாக பூந்தமல்லியை சேர்ந்த ஆஷிக் உசேன் என்பவனை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Comments