வீட்டில் இருந்து மாயமான இளம்பெண் ஏரியில் சடலமாக மீட்பு..!

0 2364

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே வீட்டில் இருந்து மாயமான இளம்பெண் ஒருவர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின் 19வயது மகள் கண்ணகி, சமத்துவபுரத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கடந்த 19-ம் தேதி மங்களம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று ரூபனாராயணநல்லூர் ஏரியில் இருந்து கண்ணகி சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கை வந்த பின்னரே இளம்பெண் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும் என என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments